மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமீழாய்வு கூட்டம் 02.11.2019 அன்று காலை மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.க.ஜேகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா, கணக்காளர் திரு.பிறேம்குமார், உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பருவகால மழை மற்றும் தேர்தல் அத்தோடு ஆண்டின் இறுதி மாதத்தில் நிற்பதனால் அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி முடிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வீதி புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி செய்து முடிக்கும் படியும் ஏனைய விசேட வேலைத்திட்டங்களான கம்பரலிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலமாக ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதி இவ்வாண்டுக்குள் முடிக்கப்படல் வேண்டும் எனவும் சகல உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இச் செயற்றிட்டங்களையும் துரிதப்படுத்துமாறு அரசாங்க அதிபர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

DSC 0675 resizedDSC 0693 resizedDSC 0692 resizedDSC 0689 resizedDSC 0653 resizedDSC 0668 resizedDSC 0652 resized