மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

 கொடியேற்றல், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து, மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்பு நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடலுடன் பொங்கல் விழா நடைபெற்றது .

 வரவேற்புரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தும் நிகழ்வுரையினை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகியும் நிகழ்த்தினர்.

 மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட உழவர்கள் மற்றும் கிராம மட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இவ் வருடத்துக்கான உழவர் விழாவில், பாரம்பரிய நிகழ்வுகள், கவியரங்கு, கலை நிகழ்வுகள் இடம்பெற்றன . 

காலை 7 மணிக்கு காக்காச்சிவட்டை வயலில் அறுவடை நிகழ்வு நடைபெற்று, 7.45 மணிக்கு காக்காச்சிவட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் தொடர்ந்து ஆலய முன்றலில் இருந்து தைப் பவனி ஆரம்பமானது . 

பண்பாட்டு (தைப் பவனி) பவனி ,பாரம்பரியமான கரகம், கும்மி, காவடி, வசந்தன் நடனங்கள், உழவர்களின் பாரம்பரியமான உபகரணங்கள், பொருள்களுடனான பவனிகளுடன் நடைபெற்றதுடன் , அறுவடை செய்யப்பட்ட நெல்லும் எடுத்துவரப்பட்டன .  

தைப்பவனி பலாச்சோலை ஸ்ரீ கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்ததும், மாவட்ட உழவர் விழா நிகழ்வுகள் ஆலய முன்றலில் நடைபெற்றது . 

மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில், கடந்த வருடமும் மாவட்ட செயலகம், 14 பிரதேச செயலகங்களும் ஒவ்வொரு வகையிலான பொங்கல்களையும், பொங்கி உழவர் விழா கொண்டாடப்பட்டது  கடந்த வருடம் உழவர் விழா நிகழ்வுகள், மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் இருந்து பண்பாட்டு பவனியுடன் மாவட்ட செலயக முன்றலில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிராமிய குளங்கள் புனரமைப்பு பணிகளில் மக்கள் பங்கேற்பு - விவசாய அமைச்சு

மக்களின் பங்கேற்பினை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவின் கிழ் வரும் சின்ன வன்னியனார் வெளிக் கண்ட பிரிவுக்குட்பட்ட போடியார் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப் பணிகள் 06.09.2018 அன்று காலை கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


இக்குளமானது துப்பரவாக்கப்படுவதன் முலம் இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்கள், கால்நடைகள் நன்மையடைவுள்ளனர். இவ் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப்பணி நிகழ்விற்கு மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள், இப் பகுதிவிவசாய அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாய நடவடிக்கைக்களுக்கான ஆரம்பக் கூட்டங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் வாரங்களுக்குள் நடத்தி முடிப்பதென மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.வை.பி.இக்பால், அவர்கள் மாவட்ட மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.வை.பி.அசார் அவர்கள் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன் அவர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த வருடத்தில் நடைபெற்ற சிறுபோகம், மற்றும் 2017 - 18 காலத்திற்கான பெரும்போகம், விவசாயிகளது பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரம் வழங்கல் எனப் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உறுகாமம், கித்துள்வெள, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவும், போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்கள், மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல் ஆகியவற்றிற்கான சிறிய நீர்ப்பாசனத்திட்ட ஆரம்பக் கூட்டங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அதே போன்று 11ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை இற்கான சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக விவசாயச் செய்கைக்கான ஆரம்பக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இக் கூட்டங்களின் போது பெரும்போக விவசாயச் செய்கைக்கான திகதிகள் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்தந்த விவசாயப்பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு தொடங்குதல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் அதன்போது நிறைவேற்றப்படவிருக்கின்றன. அதன்படி பெரும்பொகத் தீர்மானங்கள் இத்தகைய ஆரம்பக் கூட்டங்களில் எடுக்கப்படும்.

மேலும் இன்றைய இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது வங்கிகளின் கடன்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சினைகள், காடுகள் அழிப்பு எனப் பல பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுணதீவு பிரதேசத்தில் இவ்வருட பெரும் போகத்தில் 32,200 ஏக்கர் நெற்செய்கை பண்ணப்படும் - பிரதேச விவசாயக் கூட்டத்தில் தீர்மானம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (08ஆம் திகதி) பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத்திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,229 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,075 ஏக்கரும் இதுதவிர இவ்வருடத்தில் மேலதிகமாக செய்கைபண்ண கோரப்பட்டிருக்கும் மானாவாரி கண்டத்தில் 955 ஏக்கருமாக மொத்தம் 32,259 ஏக்கர் இவ்வருட பெரும்போகச் செய்கைக்கு பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 09.09.2018ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் விதைப்பு வேலைகள் 01.10.2018ஆம் திகதி தொடக்கம் 30.10.2018ஆம் திகதிவரை இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மற்றும் கமநல வங்கிகள் ஊடாக இவ்வருடம் இந்தப் போகத்திற்காக நிதி கடன் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மொழி உத்தியோத்தர்களின் இரண்டாம் மொழி அறிவினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்ட இருநாள் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் - கல்குடா வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான இருநாள் சிங்கள மொழி கற்றலுக்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 06.09.2018 திங்கட்கிழமை ஆரம்பமானாது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் திரு.A.நவேஸ்வரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர திரு.வி.சந்திரகுமாரின் வரவேற்புடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சானது இரண்டாம் மொழி அறிவினை மேம்படுத்தும் நோக்கிலும் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஏற்படும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இரண்டாம் மொழி (சிங்களம்-தமிழ்) முன்னேற்ற நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியிலும், பிரதேச செயலக ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் இச் செயற்திட்டத்தில் பல்வேறு மட்டங்களிலுமுள்ள தமிழ் மொழி பேசும் மற்றும் சிங்கள மொழி பேசும் உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழித் தேர்ச்சிக்கான செயற்திட்டமாகவே இது அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது வேதனைக்குரியது – அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார்

GA BC

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (08.09.2018ஆம் திகதி) நடைபெற்ற பிரதேச விவசாய ஆரம்பக் குழு கூட்டத்தில் தலைமையேற்று நடத்துகையில் அரசாங்க அதிபர் அவர்கள் எமது இயற்கை வளங்களை அழிப்பதில் சிலர் கண்மூடித்தனமாக செயற்படுவதை காண்கின்றோம்.

இவ்வாறானவர்களுக்கு இவ் வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது பெரும் வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.

மேலும் இவ் இயற்கை வளங்கள் என்று ஒன்று இல்லாமல் போனால் எமக்கு தொழில், எதிர்காலம் என்று எல்லாமே இல்லாமல் போகும் என்பதைப் பலர் ஏனோ விளங்கிக் கொள்வதில்லை.

அண்மையில் நாம் மட்டக்களப்பில் சில பிரதேசங்களில் இவ்வாறு இயற்கை வளங்கள் தீயிட்டு அழிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையினைக் காண்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எண்ணமாகும். அத்தோடு இப் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்கள்இ விவசாயிகள் ஒன்று கூடி தமது விவசாயம் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை தெரிவு செய்து அத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் தயாரித்து சம்பந்தப்பட்ட கூட்டங்களில் சமர்பிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதைவிடுத்து கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் அவரவர் கிராமங்களிலும்இ விவசாயப் பிரதேசங்களிலும் எதுவும் செய்யவில்லை எனக் கூறி அதற்குப் பொறுப்பான அதிகாரிகள்மேல் மட்டும் குற்றத்தை சுமத்துவது பொருத்தமாக அமையாதுஇ இப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இங்குள்ள விவசாய அமைப்புக்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளது.

மாவட்ட ரீதியாக பணியாற்றும் அதிகாரிகள் அபிவிருத்தித் திட்டங்களை தெரிவு செய்கையில் அந்த மாவட்ட ரீதியாக இருக்கும் வேலைகளின் தேவைப்பாடுகளுக்கே முன்னுரிமையினையாகப் பார்ப்பார்கள். அதேபோன்று பிரதேச ரீதியான வேலைகளுக்கு பிரதேச ரீதியில் முன்னுரிமையினைப் பார்ப்பார்கள்.

உங்களுக்குத் தெரியும் இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற 'என்டபிறைஸ் சிறிலங்கா' எனும் திட்டத்தினுள் ஏறக்குறைய 15 திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள நன்மைகளை அவசியம் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ விவசாயிகளும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பயன்தரக்கூடியதான முக்கிய விடயமெனவும் மாவட்டச் செயலாளர் கருத்துரதை;தமையினைக் காணலாம். எனவும் தெரிவித்தார்.