WhatsApp Image 2022 06 17 at 10.29.51 AM 1

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும்  விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் 16.06.2022 அன்று விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தேவையான  எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும், உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினை சந்தைப்படுத்துவதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளினை எரிபொருள் பங்கிட்டு அட்டைமூலம் வழங்கவேண்டும் என்று விவசாயிகளினால்  வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.போரதீவுப்பற்று பிரதேசத்தில்  வெள்ளநீர் உட்புகுவதினால் பல ஆயிரக்கணக்கான வயல்  நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது சுட்டி  காட்டப்பட்டதுடன்   முகத்துவாரத்தினை வெட்டுவதற்கும் இதன்போது விவசாயிகளினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமையினால்  தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்திருந்தனர்.குறித்த கலந்துரையடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பூ.பிரசாந்தன் உள்ளிட்ட மேலும் பல துறைசார் அதிகாரிகளும் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2022 06 17 at 10.29.49 AM WhatsApp Image 2022 06 17 at 10.29.50 AM 1 WhatsApp Image 2022 06 17 at 10.29.51 AM 1

WhatsApp Image 2022 06 17 at 10.29.50 AM WhatsApp Image 2022 06 17 at 10.29.51 AM WhatsApp Image 2022 06 17 at 10.29.52 AM