WhatsApp Image 2021 08 08 at 14.40.14

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் சேதனப்பசளை ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வுகள் அண்மைக் காலமாக  இடம்பெற்றுவரும் நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் 07.08.2021 அன்று நடைபெற்ற குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்காக சேதனை பசளையின் பயன்பாட்டை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும், ஜனாதிபதியின் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் ஊடாக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் தொடர்பாகவும், சேதனை பசளை உற்பத்தியினை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக எவ்வாறு ஊக்குவிப்பது தொடர்பாகவும், விவசாயிகளே சேதனைப்பசளையினை எவ்வாறு தயாரிப்பது, அதற்கான ஊக்குவிப்பு உதவிகளை அரசாங்கத்தின் ஊடாக எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பவை தொடர்பாக  இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு துஷித  பி.வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் என குறிப்பிட்டளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2021 08 08 at 14.40.16 WhatsApp Image 2021 08 08 at 14.40.12 1 WhatsApp Image 2021 08 08 at 14.40.12 WhatsApp Image 2021 08 08 at 14.40.11