இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திதர தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலக வழாகத்தில் சிரமதான நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம உள்ளக கணக்காய்வாரள் இந்திரா மோகன், மாவட்ட பொறியியலாளர் ரீ. சுமன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா, நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச அவர்களின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும்; மூலிகை மரக்கன்றுகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.