மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் உரிய சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் 29.01.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சென்ற ஆண்டிற்குரிய முன்னேற்ற அறிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகபிரிவுகளுக்கும் உரிய சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களினாலும் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக அரச அதிபரினால் விரிவாக ஆராயப்பட்டது. இம் முன்னேற்ற அறிக்கையினை கொண்டு எவ்வாறு எதிர்வரும் ஆண்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு அரச அதிபர் பாராட்டு தெரிவித்தார்.இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.