மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு க.கருணாகரன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவானது மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஐகதீசக்குருக்களினால் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.
பூசை நிகழ்வுகளில் மாவட்ட காணி மேலதிக செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், பொறியலாளர் ரி.சுமன், கிழக்குமாகாண பிரதி காணி பதிவாளர் நாயகம் கந்தசாமி திருவருள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.