மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகிய Action Unity Lanka எனும் நிறுவனம் 11.01.2021 அன்று ஒரு தொகுதி Face Mask, Sanitaizer, Face Shield,Hand Wash Sink பொருட்களை மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்திற்கு வழங்கி வைத்தனர்.
கொரோனா தடுப்பு உபகரணங்களை Action Unity Lanka நிறுவனத்தின் முகாமையாளர் திரு. காண்டீபன் இந் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திரு. சதீஸ்குமார் ஆகியோர் மாவட்டச்செயலாளர் திரு க. கருணாகரன் அவர்கள் ,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமுர்த்தி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஜதீஸ்குமார் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த உதவும் வகையில் இத் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மாவட்ட அபிவிருத்தி, சமூகசேவை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.