அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக 25 மாவட்டங்களின் கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பிற்கு மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க கடந்தவாரம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
மாவட்டத்தின் கொரோனா தொடர்பான விபரங்களையும் மக்களின் பாதிப்புக்கள் அது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன் ஏற்பாடுகள் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. கொரோனா செயலணியின் உறுப்பினராக செயற்பட்டுவந்த 23 இராணுவ படைப்பிரிவின் கேணல் எஸ்.பி.ஜீ.கமக்கே அரசாங்க அதிபருடனான சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.