மட்டக்களப்பில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரம்பக் கல்வியைத் தொடரவிருக்கும் வசதியற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் 23.11.2020 அன்று இடம்பெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீPழ் செயற்பட்டு வரும் நிறுவர் செயலகத்தினால் நடாத்தப்படவிருந்த சிறுவர் தினத்தையொட்டி இந்நிகழ்வு கொரோனா சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
கிரான் பிரதேச செயலகப்பரிவில் வறுமைக் கோட்டின் கீழுள்ள முறுத்தானை, திகிலிவட்டை, வாகனேரி, கோரவெளி மற்றும் பூலாக்காடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமையான மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ. முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். யோகராஜ், கணக்காளர் எஸ். மோகனரூபன், நிர்வாக உத்தியோகத்தர் ஆர். ரவிச்சந்திரன், உதவி மாவட்ட செயலாளர் பிரிவு பதவிநிலை உதவியாளர் கே.எம். றிழா மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.