மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தேவைகளுக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பான நீயூஅரோ தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தினால் சுமார் 70000 ரூபா பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிளைக் அரசாங்க அதிபர் கே. கருணாகரனிடம் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் 04.11.2020 அன்று இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய வன்னிஹோப் அமைப்பின் நிதிப்பங்களிப்பில் இவ்வுலர் உணவுப் பொதிகளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்குடன் நியூஅரோ அமைப்பின் இணைப்பாளர் திருமதி. உருத்திராதேவி ரவி மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் மோகனலதா ஆகியோர் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும், தொழில் இழந்தோருக்குமான மனித நேயப் பணிகள் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. எம். ஜெயசந்திரன், நியூஅரோ அமைப்பின் இணைப்பாளர் திருமதி. உருத்திராதேவி ரவி மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் மோகனலதா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.