மட்டக்களப்பில் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளையொன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் 22.10.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் முற்றிலும் அரசுக்குச் சொந்தமான இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இக்கூட்டுத்தாபனத்தினூடாக தற்பொழுது அலுவலக எழுதுபொருள் மற்றும் உபகரணங்கள், கட்டுமானம் மற்றும் வன்பொருள், அலுவலக தளபாடங்கள் மற்றும் உள்துறை வடிவமைப்புகள், வீட்டு மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஐ.சி.டி தயாரிப்புகள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புக்களும், சேவைகளும் வழங்கப்படுகின்றது.
இலக்கம் 32ஏ, 32பீ. புதிய வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச(பொது) வர்த்தக கூட்டுத்தாபன திறப்புவிழா நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திருமதி. கலைவாணி வன்னியசிங்கம், இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தலுக்கான பிரதி பொது முகாமையாளர் திரு.மகேஸ் மென்டிஸ், மனிதவள பிரதி பொது முகாமையாளர் திரு.ஜினேஸ் மதுவெல, வெளி காட்சிப்படுத்தல் முகாமையாளர் திரு.கயான் ரத்நாயக, கிளை முகாமையார் திரு.எம்.எம். ஹக்கீம், மாவட்ட தகவல் அதிகாரி. திரு.வீ. ஜீவாநந்தன், சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.