DSC 0641 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் பெரும்போக பயிற் செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் 18.09.2020 அன்று வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இப்பிரதேசத்தில் 32658.75 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்போக பயிர்ச்செய்கை பண்ணப்படுவதற்கான முன்ஆயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மானிய உர விநியோகம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவ்விவசாய நிலங்களில் சிறு நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக் கொள்ளும் 1105 ஏக்கர் நிலத்திலும், பிரதான நீர்பாசன வசதியுள்ள 11401 ஏக்கர் நிலத்திலும், மானாவாரி 19586 ஏக்கர் நிலத்திலும், மேட்டு நில பயிர் செய்கையானது 566.75 ஏக்கரிலும் நெற்செய்கை மற்றும் மறுபயிர் செய்கை பண்ணப்படவுள்ளது.

இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்முறை மாணியமாக வழங்கப்படும் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது. இதுதவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பண்ணுவதற்கு ஆர்வமூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தன் கருணாகரன், மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.என். நாகராத்தினம், மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் திரு.கே.எல்.எம். சிராஜுதீன், நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.எஸ். நிரோஜன், விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் திரு.எம்.பாஸ்கரன், கரடியணாறு விவசாய பயிற்சி நிலைய விவசாய பிரதிப்பணிப்பாளர் திரு.ஆர். சிவனேசன், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதிபன் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பெரும்போக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

DSC 0625 resized DSC 0627 resized DSC 0646 resized DSC 0641 resized

DSC 0638 resized DSC 0636 resized DSC 0628 resized DSC 0629 resized