இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 16.09.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இம்மாவட்டத்தின் அமைவிடம் மற்றும் வளங்கள் மற்றும் மக்களின் சனத் தொகை, வாழ்வாதாரம், தொழில் மற்றும் இம்மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இம்மாவட்ட மக்களின் அடையாளப்படுத்தப்பட்ட பிரதான தேவைகள் தொடர்பாகவும் கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். இதன் போது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாஅவர்களினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர். ஜதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.