DSC 0386 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6ம் கட்டையில் மிக புராதன பழமை வாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயமானது கடந்த காலங்களில் ஏற்பட்ட உள்ளுர் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்வுகாரணமாக கைவிடப்பட்டு யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பற்றை காடுகள் அடர்ந்து காணப்பட்டது.

 

இவ்வாலயத்தின் நிலை குறித்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகைக்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை புணரமைப்பு செய்வதற்கு திருவுள்ளம் கொண்டு அப்பணியினை முன்னெடுத்தனர்.

முன்னால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அயராத முயற்சியுடனும் ஊர் மக்கள் மற்றும் பண உதவிகளை வழங்கிய பரோபகாரிகள், தனவந்தர்களின் பங்களிப்புடன் இவ்வாலயம் மிகவும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு 06.09.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆயித்தியமலை சதா சகாயமாதா திருத்தலத்தின் நிறைவு நாள் இன்று புனித அந்தோனியார் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள், முன்னாள் அரசாங்க அதிபர் திரு.மா. உதயகுமார் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் திரு.ரி.சரவணபவன் மற்றும் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா, வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுபா அகியோரினால் திறந்துவைக்கப்பட்டது.

DSC 0390 resized DSC 0393 resized DSC 0398 resized DSC 0403 resized

DSC 0402 resized DSC 0390 resized