மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்று தவிர்ப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான வைரஸ் தொற்றுநீக்கி இயந்திர உபகரணம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்கு 26.08.2020 அன்று கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் வை எம் சி எ நிறுவனம் யு எஸ் எயிட் நிறுவன நிதி உதவியின் கீழ் கொவிட் 19 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டக்களப்பு சுகாதார வைத்திய பிரிவுகளுக்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்று தவிர்ப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான கிருமி தொற்றுநீக்கி விசுறும் இயந்திர உபகரணங்கள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவு திணைக்களத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களினால் கையளிக்கப்பட்டது.
உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என் .மயூரன் , வை எம் சி எ நிறுவன பொதுச்செயலாளர் திரு ஜெகன் ஜீவராஜ் , மற்றும் வை எம் சி எ நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.