மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் வழிகாட்டலில் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மட்டு முயற்சியான்மை 2020 எனும் விசேட திட்டம் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வருகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் 26.08.2020 அன்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் உள்ளுர் உற்பத்தியார்கள் தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ. வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன், திரு ஜீ. அருணன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். பிரணவசோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு ஏ. சுதர்சன், கணக்காளர் திரு எஸ். புவனேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரீ. சத்தியசீலன், மாவட்ட தகவல் அதிகாரி திரு வீ. ஜீவானந்தன், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.