மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதனமானதும் பழமையானதுமான ஆயித்தியமலை புனித திருத்தலமான சதாசகாயமாதா திருத்தல திருவிழா எதிர்வரும் 28-08-2020 அன்று ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 17/08/2020 அன்று மட்டக்களப்பு சால்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பக்தர்கள் அதிகளவாக கூடுவது தொடர்பாக ஆராயப்பட்டது. தற்போதைய கொரோனா நோய்த்தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்தல் வேண்டும் என்ற கட்டுப்பட்டினை சுகாதார திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். பொதுவாக சுகாதாரத்திணைக்களத்தின் சுற்று நிருபத்தின் அடிப்படை விடையங்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பொதுவாக மக்கள் ஒன்று கூடுகின்ற இடங்களில் கடைப்பிடிப்பது என்றும் ஒரே நேரத்தில் நூறு பக்தர்களை மாத்திரம் ஆலயத்திற்குள் அனுமதிப்பது என்றும் அதேவேளை ஆலயத்தில் விசேடமாக மூன்று திருப்பலிகள் நடாத்துவதற்கு குருமுதல்வர்கள் தீர்மானித்துள்ளனர் என்பதையும் அன்னதானம் மற்றும் தண்நீர்ப்பந்தல்கள் கடைகள் உணவகங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது.
மட்டக்களப்பு மாதா திருத்தலத்தில் இருந்து பாதை யாத்திரியர்கள் செல்வது வழமை. இம்முறை பாதயாத்திரியர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளிகளை பேனுதல் போன்ற விடையங்கள் கடைப்பிடிக்கப்பட்டு யாத்திரியர்கள் தங்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருதல் வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதையாத்திரியர்களுக்காக பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் பாதுகாப்புக்காக பொலிஸ் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தண்நீர் வழங்கும் போது போத்தல் நீர் வழங்குவதாகவும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தை கிறிஸ்தவ சமய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரேகா நிருபனின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகர், பிரதேச சபையின் தவிசாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.