DSC 0589 resized

காத்தான்குடியில் இயங்கிவரும் சிவில் சமுக அமைப்பாகிய பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி கலாமதி பத்மராஜா அவர்களுக்கு வரவேற்பழிக்கும் நிகழ்வொன்று 17.08.2020 அன்று மாலை காத்தான்குடி சம்மேளனக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற இரு சமுகத்தினையும் எனது மாவட்ட மக்களாகவே பார்கின்றேன் என அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் வேறு மாவட்டங்களைப் போலல்லாது இம் மாவட்டத்தில் இரு சமுகத்தினரும் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எமது மூதாதையர்கள் இரு சமுகங்களாகவே பார்க்கப்படாமல் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பிற்பட்ட காலங்களில் சமுகங்கள் வளர்ச்சியடைந்து வெவ்வேறு சூழல்களால் மாற்றங்கள் ஏற்பட்டு தவிர்க்கமுடியாத சம்பவங்கள் பல நடைபெற்றன. தற்போது அவை எல்லாவற்றையும் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். ஒரு அரசாங்க அதிபராக கடமையினை மேற்கொள்வதானால் இரு சமுகங்களையும் ஒன்று போல் தான் நடாத்த வேண்டும். அப்போது தான் எனது கடமையின் வெற்றியினை காணமுடியும் எனத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் 35 வருட காலமாக சிவில் சமுக அமைப்பாக செயற்பட்டு வருகின்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தலைவர் பொறியியலாளர் எம்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ. உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, காத்தான்குடி தள வைத்தயசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர்,நகரசபை செயலாளர் றிப்கா சபீன், சம்மேளன செயலாளர் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி, முன்னாள் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார், முன்னாள் செயலாளர் எஸ்.எம்.கே. முகமட், சமூகசேவையாளர் கலீல் ஹாஜியார் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

DSC 0579 resized DSC 0598 resized DSC 0614 resized DSC 0620 resized

DSC 0621 resized DSC 0635 resized