dengue

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆந் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 06ஆந் திகதி வரை 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு நோய்த்தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 10 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது போன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 23 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில்  15 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 6 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 03 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 5 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேரும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 11 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 03 பேரும் இதுவரையில் இனங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை. மேலும் கடந்த இரு வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.மொத்தமாக கடந்தவாரம் 100 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆரையம்பதி மற்றும் கோரளைப்பற்று மத்தி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.