ஜனாதிபதி தேர்தல் கடமையில் வாக்கு கணக்கெடுக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு 11.11.2019 அன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு வாக்கெண்ணும் பணியானது பொறுப்பானதும், கடமைப்பணியாக இருப்பதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவத்தாட்சி அலுவலர் வேண்டுகோள் விடுத்தார். வாக்குச்சீட்டு கணக்கெடுக்கும் பணிக்காக ஒரு பிரதம கணக்கெடுப்பாளரும், அவருக்கு உதவியாக ஆறு(06) சிரேஸ்ட கணக்கெடுப்பாளர்களும், உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் இருபது(20) பேரும் ஒவ்வொரு கணக்கெடுப்பு நிலையங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏதிர்வரும் 15ம் திகதி 27 வழங்கல் பிரிவுகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யப்படவுள்ளது பின்னர் 16ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு வாக்குப்பெட்டிகள் ஏற்கும் பணிகள் ஆரம்பமாகும். பின்னர் வாக்குகெண்னும் பணிகள் 7.00 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. என தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் தெரிவித்தார். ஏதிர்வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலை நீதியானதாகவும் நேர்மையானதாகவும் ஒரு நிலைமையுடனும் நடாத்தி முடிக்க அனைத்து உத்தியோகத்தர்களும் பணியாற்ற வேண்டும். பக்கசார்பில்லாது பணியினை முன்னெடுப்பது இத்தருனத்தில் அவசியமானதாக கருதப்படுவதாக தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

கணக்கெடுப்பு நிலையங்களுக்கு 5 முகவர்கள் வீதம் ஒவ்வொரு நிலையத்திற்கும் அனுமதிக்கப்படும் அஞ்சல் வாக்கெடுப்பு நிலையத்திற்கு இரண்டு முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 800 வாக்காளர்களுக்கு குறைந்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பிளாஸ்டிக் வாக்குப்பெட்டியும் 800 - 1500 இடைப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையங்களுக்கு நடுத்தர காட்போட் பெட்டியும் 1600 வாக்கிற்கு அதிகமாகவுள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு பெரிய காட்போட் பெட்டிகளும் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் அவர்கள் தெரிவித்தார்.

DSC 0008 resizedDSC 0029 resizedDSC 0010 resizedDSC 0014 resizedDSC 0015 resizedDSC 0016 resized