கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் 1ம் திகதி வரையும் 74 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1,237பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இதில் இரண்டு பெயர் கடந்த மாதம் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும், ஏறாவூர் பகுதியில் இருந்து ஒரு மரணமும் என இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கலாநிதி திரு.வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு வைத்திய அத்தியட்சகர் பிரிவில் இதுவரை 31 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று பட்டிருப்பு, ஆரையம்பதி ஆகிய பகுதியில் தலா 9 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மொத்தமாக கடந்த வாரம் 74 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் கழிவுகள் அப்புறப்புடத்தப்பட வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.