ஐனாதிபதி தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு 7.11.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் உதவி தெரிவித்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் அவர்களுடனும் இந் தெரிவூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான வளங்களை பெறுதல் மற்றும் இம்முறை பயன்படுத்தபடவுள்ள காட்போட் வாக்குப்பெட்டிகளை கையாள்வது என எல்லா வகையான சந்தேகங்களுக்கும் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம் அளித்தார். இம்முறை தேர்தலுக்கு வழமைக்கு மாறாக நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான முறைகள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

அமைக்கப்பட்டுள்ள மொத்த வாக்கெடுப்பு நிலையங்கள் 428 அவற்றில் 8 வாக்கெடுப்பு நிலையங்களுக்கென ஒவ்வொரு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் என்ற வகையில் 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் பணியாற்றுவர், இதற்கு மேலாக கணக்கெடுப்பு நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களும் ஏனைய கடமைக்காக மொத்தம் 4,991 பேர் இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டார்.

DSC 0884DSC 0883DSC 0871DSC 0876DSC 0896DSC 0904