மட்டக்களப்பு மாவட்டத்தின் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகவுள்ளமையால் அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த நடவடிக்கைளை ஆராயும் கூட்டம் 02.09.2019 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க திரு.அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம்.சியாத் உரையாற்றுகையில் எதிர்வருகின்ற தேர்தல் காலமும் வட கீழ் பருவப்பெயர்ச்சியும் ஒரேகாலத்தில் ஆரம்பமாகவுள்ளமையால் பல இடர்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடலாம் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் காலத்திற்காக 448 வாக்கேடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் மழைவெள்ளம் காணப்படுமாயின் மக்கள் இடம்பெயர நேரிட்டல் பாடசாலைகளில் தான் வழமையாக தங்கவைக்கப்படுவார்கள் தேர்தல் காரணத்தினால் அவர்களுக்குப் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தப்பட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுவருகின்றது.

தேர்தல் உதவி ஆணையாளர் திரு.ஆர்.சசிலன் உரையாற்றுகையில் மழைக்காலத்தில் மக்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்வது கொண்டுவருவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலம் கூட்டப்பட்டு இருப்பதால் யானைகளின் தொல்லைகள் ஏற்படும் ஒரு சில பகுதியில் வனஜீவராசி திணைக்களம் அதற்கான நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.

அனர்த்திற்கான பருவகாலம் ஆரம்பமாக இருக்கும் காலத்தில்தான் தேர்தலும் இடம்பெயரவுள்ளமையால் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கல், போக்குவரத்து போன்ற சகல ஏற்பாடுகளும் முன்னாயத்தத்துடன் இருக்கவேண்டும் என சம்மந்தப்பட்ட திணைக்களங்களை அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

DSC 0675 resizedDSC 0693 resizedDSC 0692 resizedDSC 0686 resizedDSC 0689 resizedDSC 0658 resizedDSC 0664 resizedDSC 0668 resizedDSC 0653 resizedDSC 0660 resized