WhatsApp Image 2024 12 17 at 13.08.37

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு  மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 17.12.2024 அன்று இடம்பெற்றது. மனித உரிமைகள் பிராந்திய காரியாலய  இணைப்பாளர் எ.எல். இஸ்சதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டார்.

சர்வதேச மனித உரிமை தினம் டிசெம்பர் மாதம் 10 திகதி உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டு வருகின்றமையை  முன்னிட்டு " எங்களுடைய  உரிமைகள் எதிர்காலத்திற்கான தற்போதேய நடவடிக்கை எடுப்போம்" எனும் தொனிப்பொருளில் இம்முறை இடம்பெற்றது. இதன்போது விசேட தேவையுடையவர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,  உதவி பிரதேச செயலாளர், வைத்தியர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள்,பொலிசார், மனித உரிமை உத்தியோகத்தர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 12 17 at 13.08.36 1 WhatsApp Image 2024 12 17 at 13.08.36 2 WhatsApp Image 2024 12 17 at 13.08.37 WhatsApp Image 2024 12 17 at 13.09.27

WhatsApp Image 2024 12 17 at 13.08.31 WhatsApp Image 2024 12 17 at 13.08.35 WhatsApp Image 2024 12 17 at 13.08.35 1 WhatsApp Image 2024 12 17 at 13.08.36