WhatsApp Image 2024 12 08 at 07.40.30

மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பாராட்டு விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 07.12.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா  முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய முறையில் மங்கல விளக்கேற்றி தமிழ் தாய் வாழ்த்துப்பாடி இந்நிகழ்வு ஆரம்பமாகியது. இதன் போது பாடல் இசைத்தல், இலக்கிய விமர்சனம், சிறுகதையாக்கம், பேச்சு, நடனம், கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் கௌரவிப்புகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன்,  கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு பிரதேச  செயலாளர் வி.வாசுதேவன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.எ.சி. ஜெய்னுலாப்தீன் மற்றும் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கலை, கலாசார,  இலக்கியம் தொடர்பான போட்டிகளின் சிறார்களை பங்கேற்கச் செய்வதன் மூலம் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடிவதுடன் தேசிய மட்டத்திலும் இவர்கள் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார்.

WhatsApp Image 2024 12 08 at 07.40.35 1 WhatsApp Image 2024 12 08 at 07.40.30 1 WhatsApp Image 2024 12 08 at 07.40.30 WhatsApp Image 2024 12 08 at 07.40.34

WhatsApp Image 2024 12 08 at 07.40.35 WhatsApp Image 2024 12 08 at 07.40.34 1 WhatsApp Image 2024 12 08 at 07.40.37 WhatsApp Image 2024 12 08 at 07.40.38

WhatsApp Image 2024 12 08 at 07.40.38 1 WhatsApp Image 2024 12 08 at 07.40.29