
எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் 02.10.2024 அன்று இடம்பெற்றது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேர்தல்களின் போது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் விஷாந்த, பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






