நாட்டில் வளர்ச்சி கண்டு வரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சுற்றுலாத்துறை சார்ந்த விசேட திட்டங்களை அமுல்படுத்த அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் திருமதி.டினுசா சிறிவீர அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போசாக்கு தொடர்பான செயற்திட்ட அறிக்கையினை தயாரிக்கும் கூட்டம் கடந்த 15.08.2019 (வியாழன்) மற்றும் 16.08.2019 (வெள்ளி) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட மட்டத்தில் டெங்கு தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவதற்கு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள மட்டத்திலான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 19.08.2019 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சுடன் உள்ளக நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து செயல்படுத்தி வருகின்ற கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம் 15.08.2019 மட்டக்களப்பில் நடைபெற்றது.

மேற்படி மாவட்டத்தின் போசாக்கு செயற்பாட்டுத்திட்டம் தயாரித்தலுக்கான செயலமர்வுகள் எதிர்வரும் 15.08.2019 மற்றும் 16.08.2019 ஆகிய தினங்களில் காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இளைப்பாறிய மற்றும் மரணித்த உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் ஓய்வூதிய நிதியை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும் இணைப்புக்குழுவின் விசேட கூட்டம் கடந்த 06.08.2019 செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பக்கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைத்திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மதிப்பீடு செய்யும் இவ் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில் கடந்த 03.08.2019 சனிக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவானது நாளை 03.08.2019 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடெங்கும் 16,800 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 277 பட்டதாரிகளுக்கு புதிதாக பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது எதிர்வரும் 01.08.2019 ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக ‘‘டேபா’’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்ற அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையில் ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திச்செய்கை மாவட்ட செயலகத்தின் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப்பிரிவில் சுமார் 345 ஏக்கரில் மேற்க்கொள்ளப்பட்டது.

தேசிய மட்ட மத்தியஸ்த தின முதலாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் 19.07.2019 அன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

நாடெங்கும் செயல்படும் சிறுவர் இல்லங்களின் முகாமைத்துவங்களை மேலும் மேம்படுத்தி இல்ல சிறார்களின் எதிர்காலத்தினை மேலும் சிறப்பாக கொண்டுவர தேவையான உளவளப்படுத்தல் நடவடிக்கையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும் விசேட நிகழ்வொன்று 18.072019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தி குழுவின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடின பந்து கிரிக்கட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும், மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி திரு.ஜோசெப் பொன்னையா அவர்களும் சிறப்பு  அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

30 ஆண்டு வரலாற்றை பூர்த்தி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 09.07.2019 அன்று நடைபெற்றது.

இடம் -  மட்/சிவானந்தா விளையாட்டு மைதானம்

திகதி - 06.07.2019 சனிக்கிழமை

மட்டக்களப்பு  மாவட்ட செயலகம் ஏற்பாடு  செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் 02/07/2019 மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கதினால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

அகில இலங்கை  ரீதியிலான 45வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில்  மட்டக்களப்பு  மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று  தெற்கு பிரதேச  செயலகத்தின் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழகத்தின் வீராங்கனைகள் முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்   கொடுத்தமை  குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் தடுப்பு வாரம் 23ம் திகதி ஜுன் முதல் 1ம் திகதி ஜுலை வரைக்கும் நாடு முழுவதுமாக நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டு வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினைச்  சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான முன்னாயத்தங்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கு அமைவாக 21.06.2019 மதியம் 2.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

போசாக்குக் குறைவான மக்களுக்குரிய போசாக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட திட்டங்களை இனங்காணப்பட்ட போசாக்குக் குறைவான மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களில்  அமுல்படுத்த  ஜனாதிபதி செயலகம்  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

மக்களின் பங்கேற்பினை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவின் கிழ் வரும் சின்ன வன்னியனார் வெளிக் கண்ட பிரிவுக்குட்பட்ட போடியார் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப் பணிகள் 06.09.2018 அன்று காலை கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் வாரங்களுக்குள் நடத்தி முடிப்பதென மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.வை.பி.இக்பால், அவர்கள் மாவட்ட மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.வை.பி.அசார் அவர்கள் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன் அவர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (08ஆம் திகதி) பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் - கல்குடா வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான இருநாள் சிங்கள மொழி கற்றலுக்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 06.09.2018 திங்கட்கிழமை ஆரம்பமானாது.

இயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது வேதனைக்குரியது

– அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார்