சுவிஸ் உதயம் நிறுவனத்தினால் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் 12-12-2019 அன்று  நடைபெற்றது.

சீரற்ற காலநிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணபொருட்களை கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் (07.12.2019) முக்கிய கலந்துரையாடல் 11 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் இதுவரை 42 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளது. இச்சேத விபரங்களை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு வெள்ள அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு.ஏ.சி.எம்.சியாத் அவர்களுடன் வேற்றுச்சேனை கிராம சேவகர் பிரிவினை விசேடமாக பார்வையிட்டனர்.

அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள், குளங்கள், வீதியோரங்கள் மற்றும் மணல்பாங்கான பிரதேசங்களில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு  மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை 09.12.2019 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசப்பிரிவிற்கு உட்பட்ட செல்வா நகர் கிராம மக்களுக்கு கூரைப்படங்குகள் 09.12.2019 அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களால் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 6696 குடும்பங்களைச் சேர்ந்த 22614 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 06.12.2019 முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் நேரில் சந்தித்து அங்குள்ள நிலைமையை கேட்டறிந்து அங்குள்ள மக்களின்  இயல்பு வாழ்க்கையைக் கேட்டறிந்து உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்தார்.

தற்போதய தொடர்மழை காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 10738 குடும்பங்களைச் சேர்ந்த  35756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் (06.12.2019) பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

DSC 0815 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் தினம் 05.12.2019 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் (ஒசானம்) நிலையம் சத்துருக்கொண்டானில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  

வெள்ள அனர்த்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மாவட்ட மக்களை பார்வையிடுவதற்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம் சியாத் மற்றும் பிரதேச செயலாளர்கள் வெள்ள அனர்த்தினால் பாதிப்புள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை பார்வையிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 25 ஆந் திகதி தொடக்கம் 29 ஆந் திகதி வரையும் 95 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழை காரணமாக நாளுக்கு நாள் மக்கள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.எஸ். வியாழேந்திரனுடன் அரசாங்க அதிபர் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழையினால் தாழ்ந்த பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறித்த தாழ்ந்த பிரதேசத்திலுள்ள நீரை அகற்றும் பணிகளை உள்ளூராட்சி சபைகளுடாக செயற்படுத்துமாறு விடுத்த பணிப்புரைக்கமைய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

DSC 0511 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலை தொடர்பான ஊடகவியாளர் சந்திப்பொன்றினை 02.12.2018 மாலை 4.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது அலுவலக கேட்போர் கூடத்தில் நடத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் நாவற்குடா கிழக்குப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை நாவற்குடா ஆரம்பப் பாடசாலையில் இருபத்தைந்து (25) குடும்பங்களை சேர்ந்த எண்பத்தேழு(87) பேர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அனர்த்த நிவாரண நிலையத்துடாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 15ம் திகதிதொடக்கம் 22 திகதி வரையும் 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

பாவனையாளர் அலுவலக அதிகாரசபையினால் 27.11.2019 காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரிகின்ற வாகன சாரதிகளுக்கான திறன் பயிற்சி கருத்தரங்கு 26.11.2019 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாகத்தின் கீழ்வருகின்ற பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் நடைமுறைகளை காலத்திற்கு காலம் சில மாற்றங்களுடன் செயற்படுத்தல் வேண்டிய தேவை அரசாங்க திணைக்களங்களுக்கு உண்டு. அந்த வகையிலே இது தொடர்பான ஆளுமை விருத்தி செயல் அமர்வு 26.11.2019 அன்று மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் போசாக்கு உணவுப்பொதிகளும் இலவமாக வழங்கும் நிகழ்வு 24.11.2019 அன்று 10.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையும் 91 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி (சூரையடி) எனும் கிராமத்தில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் மற்றும் பயன் கொள்ளும் மக்களுக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் 20.11.2019 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களாக வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினர் இன்று(15) மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் பிரதான வாக்கெண்னும் நிலையத்திற்கு வருகை தந்து தங்களின் அவதானிப்புக்களை செய்திருந்தனர்.

ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் 428 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐனாதிபதி தேர்தலுக்கான பிரதான வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவிருக்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிலமைகளை கண்டறிந்தார்.

இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டுப்பிரிவிற்கு இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் கடமையில் வாக்கு கணக்கெடுக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு 11.11.2019 அன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் 1ம் திகதி வரையும் 74 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூவருக்கான வாக்குச்சீட்டுக்கள் 15ம் திகதி மட்/இந்துகல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவூனதீவு வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.

ஐனாதிபதி தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு 7.11.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் உதவி தெரிவித்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் அவர்களுடனும் இந் தெரிவூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்கள முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் பயிற்சிக் கருத்தரங்கு 04.11.2019 காலை 10 மணியளவில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கடந்த வாரம் ஏற்ப்பட்டுள்ள கனமழைகாரனமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயத்தினை குறைக்கும் நடவடிக்கையாக 02.11.2019 அன்று மாவட்ட அரசாங் அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அனுமதியுடன் பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவனின் நேரடி கண்காணிப்பில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியலாளர் திரு.எஸ்.சசிநந்தன் மற்றும் மீன்பிடித்திணைகள பிரதிநிகள், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொன்டு வெள்ள நீரை வெட்டிகடலுக்குள் அனுப்பப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமீழாய்வு கூட்டம் 02.11.2019 அன்று காலை மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகவுள்ளமையால் அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த நடவடிக்கைளை ஆராயும் கூட்டம் 02.09.2019 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க திரு.அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும்மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முழ்கி அழிவடையும் அபாயம் இருப்பதால் முகத்துவாரத்தினை வெட்டி கடலுக்குள் வெள்ள நீரினை ஓடவிடும்படி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை விவசாயிகள் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களிடம் முறையிட்டதை தொடர்ந்து 01.09.2018 பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.A.M.S சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு 01.11.2019  பிற்பகல் 4.15 மணியுடன் முடிவடைந்து. அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இரண்டு தினங்களிலும் பதிவாகவில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 31.10.2019 மற்றும் 01.11.2019 தபால் மூலமான வாக்களிப்பு நடைபெற்றது. இக்கடமையில் 32 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையில் ஈடுபட்டு 154 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த 30.10.2019 பி.ப 3.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் திரு.செயினுஸ் ஆப்தின் மற்றும் கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் விசேட செயற்திட்டத்தின் கீழ் "வனரோபா" காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டமானது ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை தேசிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது தற்போது இலங்கையில் 17% வனப்பகுதிகளே காணப்பட்டு வருகின்றது. இதனை 32% ஆக காட்டு வளத்தினை அதிகரிப்பதற்கான இத்தேசிய திட்டத்தில் அரச, அரசசார்பற்ற அனைத்து திணைக்களங்களும் இதில் இணைந்து தற்போது செயற்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், ஏறாவூர் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும், காத்தான்குடி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும், வெல்லாவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 2 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் பணியாற்றவுள்ள சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளர் திரு.ஆர்.சசீலன் தலைமையில் கடந்த 29.10.2019 காலை நடைபெற்றது. பயிற்சி வகுப்பானது ஆரம்ப கட்டமாக சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்றது.

கோரளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.கரன் தலைமையில் 28.10.2019 அன்று காலை மு.ப 11 .00 மணியளவில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2019 காலை மு.ப 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 104(ஆ)(4)(அ) உறுப்புரைக்கமைய "தேர்தல் காலத்தின்போது அரசாங்கத்திற்கு அல்லது ஏதேனுமொரு பகிரங்க கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏதேனும் அசையும் அல்லது அசையா ஆதனம்" யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு எவரேனும் வேட்பாளரை ஊக்கப்படுத்துகின்ற அல்லது தடுக்கின்ற நோக்கத்துக்காக யாதேனுமோர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கான தத்துவம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு.

மட்டக்களப்பு மாவட்ட "பாம் பவுன்டேசன்" நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவி திட்டங்களையும், அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் 24.10.2019 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் பருவகால நிலையினால் ஏற்படுகின்ற அனர்த்தம் சம்பந்தமான முன்னாயத்த ஒழுங்குபடுத்தல் கலந்துரையாடல் கடந்த 24.10.2019 காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் "தொலஸ் மகே பாண" வேலைத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியானது பிரதேச செயலகங்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத்தில் 23.10.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களை தீர்த்துவைக்கவும் மற்றும் சுற்றாடலை பாதுகாக்கும் முகமாகவும் கலந்துரையாடும் கூட்டம் 22.10.2019 அன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போருக்கு முன்னரான நிலமையும் தற்போது காணப்படுகின்ற நிலமையினையும் அறிந்து கொள்வதற்காக "டோகா" பல்கலைகழக உயர் பட்டப்படிப்பினை மேற்கொள்கின்ற ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 16 பிரதி நிதிகள் கடந்த 20.10.2019 காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்திருந்தனர்.

பருவபெயர்ச்சி காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நிவாரண முன்னாயத்த திட்டமிடல் மற்றும் சென்டாய் கட்டமைப்பினை செயற்படுத்துதல் தொடர்பான கூட்டம் 18-10-2019 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மகளீரை உதைப்பந்தாட்டத்துறையில் வளர்ச்சிகான செய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் வேண்டுகோளுக்கமைய புலம்பெயர்தோருக்கான சர்வதேச அமைப்பான ஜ.ஒ.எம் நிறுவனம் கனடா நாட்டு நிதி உதவியின் விசேட திட்டங்களை அமுல்படுத்த முன்வந்துள்ளது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண மட்ட விருது வழங்கும் வைபவமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மகாநாட்டு மண்டபத்தில் நேற்று 17.10.2019 காலை 11.00 மணிக்கு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் திருமதி.நில்மினி.க.கேரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை வளர்ச்சிகாணச்செய்ய மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபை துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபையின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு, சட்டம் மற்றும் நீதி என்பன எவ்வாறு நிலை நாட்டப்பட வேண்டும் என்பது தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு 16.10.2019 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட உளநல விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரில் நேற்று (10.10.2019) காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்திக்கான கலந்துரையாடல் கடந்த 09.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கடந்த 07-10-2019 அன்று மாலை களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வாணி விழாவும் ஆயுத பூசையும் நேற்று 08.10.2019 மிக சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று 03.10.2019 காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் "டேவா" மண்டபத்தில் கடந்த 01.10.2019 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக சுற்றுநிருபத்தினை அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் பயிற்சிப்பட்டரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று 30.09.2019 நடைபெற்றது.

சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு எற்படும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூவரஞ்சினி முகுந்தன் அவர்களின் தலைமையில் 27.09.2019 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நன்னீர் மீனவர் சங்கத்தின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்று கடந்த 26.09.2019 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சின் வழிகாட்டலில் உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு உதவித்தொகையினை வழங்கும் நடவடிக்கையினை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்ப கல்வி, முன்பள்ளி கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் நடாத்திய மாகாண தமிழ் இலக்கியவிழா கடந்த 22.09.2019 அன்று காலை மட்டக்களப்பு நகரில் பல்வேறு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் பண்பாட்டுப்பேரணியுடன் ஆரம்பமாகியது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் திரு.டேவிட் ஹொலி கடந்த 20.09.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதி களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று 18.09.2019 முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 இன்று வரையும் 3,423 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4,359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13,525 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் விழிப்புனர்வு கூட்டம் 17.09.2019 காலை மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்துரையாட்டில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.டிஎம் .எம்.சரத் அபேகுணவர்த்தன அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களை ஆற்றுப்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பரிந்துரைக்கமைய ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி திட்டத்தில் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள் 16.09.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டன.

எதிர்வரும் (18)ம் திகதி புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் வழங்கப்படவுள்ள வெளிவாரி பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்கான அழைப்புக்கடிதம் கிடைக்காத மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அறிவிக்கின்றார்.

மட்டு நகரில் 65 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் 12.09.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை சகல நிர்வாக உத்தியோகத்தர்களும் நேற்றும்(10.09.2019) இன்றும்(11.09.2019) சுகயீன விடுமுறை என அறிவித்து தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினர் தீர்மானித்து, இன்று 11ம் திகதி அனைத்து சேவை உத்தியோகத்தர்களும் பொது நிர்வாக அமைச்சின் முன்றலில் எதிர்ப்பு செயற்பாட்டில் இடுபடுகின்றனர்.

இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினரால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஒன்று கூடலில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறான வார்த்தை பிரயோகங்கள் மூலமாக பரப்புரைகள் செய்து வந்தமைக்கு எதிராக கறுப்புபட்டி அணிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டும் நடவடிக்கையை 11.09.2019 புதன்கிழமை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர் அதனை எதிர்வரும் புதன்கிழமை (18.09.2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஊடக பிரிவுக்கு தெரிவித்தனர்.

தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம் கடந்த முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு 09.09.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் திரு.எஸ்.குணநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் 09.09.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரீ.சுதர்சினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசன மானாவாரி கண்டங்களில் நெற்பயிற்செய்கை செய்வது தொடர்பாகவும் கால்நடைகளை வெளியேற்றுதல், உரமானியம், பயிர்காப்புறுதி மற்றும் வங்கிக்கடன்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் 09.09.2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ஆந் திகதி மற்றும் ஆகஸ்ட் 16 ஆந் திகதி நிலவிய அசாதாரண காலநிலையின் போது பலத்த சுழல் காற்றினால் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தது. இதற்கான நிவாரணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்பின் பெயரில் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்திற்கூடாக 1.6 மில்லியன் நிதியினை உடனடியாக விடுவித்து இச்சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 1ம் கட்டமாக வீடுகள் புணரமைப்பதற்கு தலா 10000 ரூபா காசோலை 06.09.2019 அன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.

பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம்-2019/2020 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கீழ் வரும் அட்டவணையின் பிரகாரம் நடைபெறவிருக்கின்ளறது.இக் கூட்டத்திற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக சேறு பூசி வரும் நடவடிக்கையை கண்டித்து எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டகளப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின், மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் விசேட திட்டத்திற்கமைய  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் நிர்மாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிடதொகுதி எதிர்வரும் 12ம் திகதி காலை 10 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சர்ச்சைக்குள்ளாயிருக்கும் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் இதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு ஆயரினால் கூட்டப்பட்ட நல்லிணக்க குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் 27.08.2019 அன்று மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இணைக்குழு தலைவரான ஆரம்பக்கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கெளரவ அலிஸாகீர் மௌலானா அவர்கள், மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் கெளரவ ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் இருவரின் தலைமையில் நடைபெற்றது.

வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் உதவியினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள 30 பாடசாலைக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முதல் கட்ட ஆய்வு அறிக்கையினை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களுடன் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. தவராஜா தலைமையில் 11 மணியளவில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யுத்த சூழலால் இடம் பெயர்ந்து தற்காலிகமாக குடியேறி மீளவும் சொந்த இடங்களில் குடியேறுகின்ற அனைவருக்கும் அவர்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளை இலகுவாக வழங்க வேண்டும் என்ற கொள்கை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்திகரமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி அனுசரனையில் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 2019 ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 22.08.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகத்தில் கடந்த 19.08.2019 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சுகாதார திணைக்களமும், பிரதேச சபையின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் இது தொடர்பான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் என்ரபிறைஸ் சிறிலங்கா இலகு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள், மீனவர்கள், மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு சுமார் 5 கோடி ரூபா நிதியில் இலகுகடன் தொகையானது 19-08-2019 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வுகளில் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது 27.08.2019 ஆந் திகதி முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.