DSC 0893 resized

பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு பென்சன் திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும்வரை ஏப்ரல் ,மே   மாதம்  வரைக்குமாக  தலா 25000 ரூபாய் வீதம் 50000 ரூபா முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் சகல அரச திணைக்களத்தலைவர்களையும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

DSC 0893 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் 03.04.2020 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

DSC 0893 resized

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிவருவதுடன் மரணங்கள் அதிகரித்துச் செல்கின்ற இக்காலப்பகுதியில் அதனை எதிர்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.04.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0169 resized

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DSC 0847 resized

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிக்க ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 31.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0747 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள், கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெறுகின்றது அது தொடர்பான நடைமுறை பிரச்சனைகளை ஆராய்ந்து கொண்டனர்.

DSC 0774 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாக சென்றடையவில்லை. எனவே அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனை மக்களிடையே கொண்டு செல்ல கூடிய கவனம் செலுத்த வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

547b1dbe 69b2 4cda b032 07e9cff0bfbe resized

கொரோனா வைரஸ் பரவுவதனைத் தடுக்க அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தால் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முதியோர் எதிர்நோக்கும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DSC 0794 resized

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலை யாளர்களின் குடும் பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250  மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல்  ஊடாக  வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு முன்வந்துள்ளது.

DSC 0753 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது நிலவும் அசாதாரன நிலையினை கருத்திற்கொண்டு மக்களுக்கு சுமுகமான பொருட்கள் வினியோகம் நடைபெறவேண்டும் என்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு களஞ்சியசாலை ஆகிய லங்கா சதொச வியாபார நிலைங்களை அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா 26.03.2020 அன்று திறந்து வைத்தார்.

DSC 0629 resized

மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அவசரமாக மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் பணிமணையில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

DSC 0674 resized

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 25.03.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

DSC 1155 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மற்றும்  சிவில் சமூக அமைப்பினரும் அதன் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் பணியாளர்களான வைத்திய நிபுனர்கள், வைத்தியர்கள், வைத்திய உதவியாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருத்துவ மாதர்கள், மருந்தாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள், சிற்றுழியர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கனேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் ஆகியோரின் அற்பணிப்பு மிக்க தியாக சிந்தனை கருணை மிக்க பணியினை  மனதார உளம் கனிந்து பாராட்டினார்கள்.

DSC 0653 resized

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் 23.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

download resized

சிறுபோக வேளாண்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம் என அரசாங்கம் பணிப்புரைவிடுத்ததை தொடந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு சிறுபோக விசாயிகள் எவ்விதமான அச்சங்களும் இன்றி தங்களின் விவசாய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கும்படியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

DSC 0892 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த்தாக்கம் இருக்கலாம் என கருதப்படும் நபர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த சில நாட்களாக வீடுகளில் தங்கி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அரசினால் உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.

DSC 0521 resized

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பரவலைத் தடுப்பதற்காக தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

DSC 0342 resized

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஐந்தாவதும் இறுதி நாளுமாகிய 19.03.2020 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.

DSC 0156 resized

கொடிய கொரோனா வைரசினை மட்டக்களப்பில் இருந்து நீக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  17.03.2020 அன்று இடம் பெற்றது.

DSC 0227 resized

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நான்காவது நாளாக மாவட்டச் செயலகத்தில் நியமனப் பத்திரங்களைக் கையேற்கும் நிலையத்தில் நடைபெற்றது.

01 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் பொருட்டு புதிய பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் திட்டமிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கனியவள முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05 resized

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியஸ்தர் சபையினரின் முன்னேற்ற ஆய்வுக் குழுக் கூட்டம் 12.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

dengue

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆந் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 06ஆந் திகதி வரை 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

DSC 2170 resized

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழா பெருமளவு மகளிர் அமைப்புக்களின் பங்களிப்புடன் 11.03.2020 மாலை  வெகு விமர்சையாக இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

01 resized

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமைகின்ற அமைச்சுக்கள் அரச தினைக்களங்கள், மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான பாராளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்தப்படுகின்ற நிதி நிருவாக நடவடிக்கைகளின் முன்னேற்ற முன்னடைவுகளை கண்காணிக்கும் 2018ம் நிதி ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியிலான மாவட்ட செயலகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

25690002 1 resized

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2020 சிறுபோக வேளான்மைச் செய்கை நவகிரி பெரிய நீர்ப்பாசனத்திட்டத்திலும், மற்றும் வெல்லாவெளி சிறுநீர்ப்பாசனத்திட்டங்களினூடாகவும் சுமார் 17200 ஏக்கரில் செய்கை பண்ணுவதென 02.03.2020 அன்று வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப பயிர்செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

DSC 9852 resized

மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் கனிஸ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டத்தினை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜக்கியத்தினையும் நல்லுறவினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DSC 1652 resized

மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவுகோல் எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகம் மனிதவள மேம்பாட்டுதிறன் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் எஸ்கோ நிறுவனம் இணைந்து இத்தொழில் வழிகாட்டும் சந்தையினை 27.02.2020 அன்று மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் நடாத்தியது.

DSC 1558 resized

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சிநிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட யுவதிகளின் ஆக்கப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் விசேட கண்காட்சி 27.02.2020 அன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா ஜஹம்பத் அவர்கள் இந்துக்கல்லூரியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

DSC 1406 resized

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் 26.02.2020 புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக்காரியாலயத்தில் பொதுமக்களை சந்தித்தார்.

105217640 mosquito danger sign template design element for poster card emblem logo மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 15 ஆந் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 21 ஆந் திகதி வரையும் 134 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

25650023அபிவிருத்தி என்பது வெறுமனே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மட்டும் பூரண அபிவிருத்தியாக கருத முடியாது. எமது சமூகத்திற்குத் தேவைப்படுவது தனியார் துறையினரின் வளர்ச்சியும் இணைந்திருக்க வேண்டும். இதன் மூலமே பூரணமான அபிவிருத்தியை அடைய முடியும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு தாண்டவம்வெளி திவா ஹோம் கட்டட நிர்மாண கலை நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

DSC 1285மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 25.02.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DSC 1285மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 25.02.2020 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வரவேற்பு உரையுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானகெளரவ சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

25640038 Copy2020 இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச பிரிவுகளிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அம்மணி அவர்களின் மேற்பார்வையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஹாலித்தீன் அமீரின் நெறிப்படுத்துதலில் 22.02.2020 அன்று சிறப்பாக நடைபெற்றன.

25640045இலங்கை அரசின் நிதியில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில் சமூக வலுவூட்டல் அமைச்சர் கெளரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நெறிப்படுத்துதலில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு 450 வீடுகளை அமைக்க தீர்மாணிக்கப் பட்டுள்ளது.

25640016 1சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுளின் 163 வது ஜனன தினம் மட்டக்களப்பு நகரில் பெருமளவு சாரணிய மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக 22.02.2020 அன்று கொண்டாடப்பட்டது.

DSC 1054 reபிரதேச மட்டத்தில் கலைஞர்களையும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கலாசார நிகழ்வுகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த விசேட திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த 20.02.2020 அன்று நடைபெற்றது.

105217640 mosquito danger sign template design element for poster card emblem logo மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 07 ஆந் திகதி ஆந் திகதி தொடக்கம் 14 பெப்ரவரி வரையும் 170 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

DSC 1022 reமட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று 18.02.2020 காலை 9.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

DSC 0954 reகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுடையவர்களின் நலன் கருதிசெயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதி சேர்க்கும் முகமாக வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கொடிவாரம் 17.02.2020 ஆரம்பமாகி எதிர்வரும் 28.02.2020 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

105217640 mosquito danger sign template design element for poster card emblem logo மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 31 ஆந் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 07 ஆந் திகதி வரையும் 173 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

DSC 0601 reபட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் இறுதி நாள் போட்டி நிகழ்வுகள் 13.02.2020 மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

DSC 0777 reமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இன்று காலை மாவட்டச்செயலக வளவில் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான பணி 14.02.2020 அன்று இடம்பெற்றது.

DSC 0577புதிய அரசாங்கத்தின் உரமானிய கொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறு போகபயிர்ச்செய்கையின் போது பயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உர விநியோக இலக்கினை பரிசீலிக்கும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேசிய உரச்செயலகத்தின் செயற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 12.02.2020 நடைபெற்றது.

DSC 0570 reமட்டக்களப்பு மாவட்டத்திலும் இளைஞர் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 11.02.2020 மற்றும் 12.02.2020 செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தினம் அதிகளவான இளைஞர் யுவதிகளுடன் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தமை அவதானிக்க முடிந்தது.

105217640 mosquito danger sign template design element for poster card emblem logo மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரையும் 193 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

DSC 1512 reஇலங்கையின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம்(லைசன்)குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 06.02.2020 அன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

DSC 1293 resizedஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தினத்தினை 04.02.2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.

DSC 1080 resizedமட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.02.2020 அன்று இடம் பெற்றது.

DSC 1081 reஅதிமேதகு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் தனது அமைச்சினூடாக இலங்கை பூராகவும் "கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்" எனும் தேசிய வேலைத்திட்டமானது 01.02.2020 அன்று குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அது போன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்றது.

DSC 1145 resized மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா 01.02.2020 அன்று மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

DSC 0633 resized கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் 01.02.2020 காலை இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் திரு.ஹரி மெகரீனன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகளை ஆராய்ந்தனர்.

DSC 0711 resized

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது ஆண்டு  சங்காபிஷேக சிறப்பு பூசை 31.01.2020 அன்று நண்பகல் பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

DSC 0810 resizedமட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரை சந்தித்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.

DSC 0771 resizedமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 27.01.2020 அன்று காலை தைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூட திறப்பு விழாவும் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் சிறப்பிக்கப்பட்டது.

DSC 0731 resizedமட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 27.01.2020 அன்று சுபவேளையான 10.35 மணியளவில் மாவட்ட செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக தலமையேற்க வந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்டசெயலக சகல உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என்போரால் வரவேற்கப்பட்டார்.

DSC 0252 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான சிற்றுண்டி நிலைய திறப்பு விழா 24.01.2020 அன்று மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் திருமாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மு.ப 11.00 மணியளவில் இடம்பெற்றது.

IMG 4805 resized2019 - 2020 பெரும்போக வேளாண்மை அறுவடை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுடைய நெற்களை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கடந்த 24.01.2020 அன்று நடைபெற்றது.

IMG 4820 resizedமட்டக்களப்பு மாவட்ட கலாசார கூடம் மாவட்ட அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலகத்தில் 24.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.

dengue resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 03 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 17 ஆந் திகதிவரையும் 248 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

IMG 4736 resizedமட்டக்களப்பு தொழில்நுட்பக்க கல்லூரி மாணவர்களின் தொழில் பயிற்சிக்காக மோட்டார் சைக்கிள்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.உதயகுமார் அவர்கள் 24.01.2020 அன்று வழங்கி வைத்தார்.

IMG 4864 resized

மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களின் வருடாந்த கூட்டமும் நிர்வாக தெரிவும் 24.01.2020 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

IMG 4964 resizedமகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மாவட்ட ரீதியில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

IMG 4920 resizedஉள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் 20.01.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

DSC 0143 re சிறு போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்நோக்கும் விலைப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ ஜெயசுந்தர அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட மட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DSC 0150 reமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா இம்முறையும் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் கடந்த 17.01.2020ம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Dengueமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 27 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 03 ஆந் திகதிவரையும் 216 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

DSC 0002 resizedவிவசாய அமைச்சின் தேசிய உரச்செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவின் முறுத்தானை விவசாய மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கினை  கிரான் முறுத்தானை முருகன் கோவில் வித்தியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் 07.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

DSC 1186 resized  திறன் அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட  வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக சுற்றுலாத்துறையினையும் கலை கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

Dengueமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 20 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 27 ஆந் திகதிவரையும் 182 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

25370024 resized

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2020ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதி அரச பணியாளர்கள் கடமைகளைத் தொடங்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டு அரசாங்க சேவை சத்தியபிரமான உறுதிமொழியினையும் பெற்றுக்கொண்டனர்.

DSC 0161 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் மற்றும் கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச்செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 31.12.2019 அன்று நடைபெற்றது.

DSC 0095 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் அதிகளவான மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நிவாரணப்பணியினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

DSC 1013 resized உலக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலும் உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தினை 2012ம் ஆண்டு இலங்கையிலும் அறிமுகப்படுத்தியிருந்தனர்.

DSC 0943 resized

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில் தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு 30.12.2019 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில்   நடைபெற்றது.

DSC 0835 resized

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை  பாராட்டி கௌரவிப்பும் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வும் பொதுச்சபை கூட்டமும் 29.12.2019 அன்று ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க  மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு உதயராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

DSC 0777 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

101973733 stock vector mosquito danger sign template design element for poster card emblem logo vector illustrationமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 13 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 20 ஆந் திகதிவரையும் 157 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

DSC 0631 reசீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அரச அரசசார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

DSC 0530 resizedசுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூரும் முகமாக 26.12.2019 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

DSC 0604 resizedபால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு 26.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

DSC 0280 resizedகிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா ஜகம்பத் 25.12.2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீரற்ற காலநிலையால் இம்மாவட்டத்தில் வெள்ளஅனர்த்தத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் பற்றியும் கண்டறிந்ததுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தார்.

DSC 0079 resized மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு ஏ.சி.எம்.சியாத்  மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலை உத்தியோகத்தர்கள் சகிதம் வெள்ள அனர்த்த நிலைகளை கண்காணிப்பதற்காக கரவெட்டியாறு, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை பார்வையிட்டனர்.

DSC 0210 resizedமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ்.வியாழேந்திரன் அவர்கள் அவசரமான கூட்டத்தினை இன்று  24.12.2019 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களுடன் இணைந்து மாவட்ட அனர்த்த  நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

DSC 1043 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான வான்மைவிருத்தி பயிற்சிப்பட்டறை 23.12.2019 அன்று காலை 9.30 மணிக்கு  மாவட்ட  செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

DSC 0133 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் 23.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் சந்திவெளி ஊடாக திகிலி வட்டைக்கு நீர் வழிப்பாதைக்கான இயந்திரத்தில் அனுப்பிவைக்கப்பட்டது.

DSC 0104 resizedஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் மூழ்கிய கொம்மாதுரை கிராமத்திற்குட்பட்ட தீவுப்பகுதியில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்களை கொம்மாதுரை அரசின் கலவன் பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் 23.12.2019 வழங்கி வைக்கப்பட்டது.

DSC 0027 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் நீர்தேக்கங்கள், குளங்கள் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உன்னிச்சை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கரவெட்டியாறு கிராமத்தை சார்ந்த 58 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப்பொருட்களை 23.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் வழங்கி வைத்தார்.

DSC 0961 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் கலையை வாழ வைக்கும் நோக்கில் கண்ணகி கலை இலக்கியக்கூடல் நடாத்தும் கண்ணகி கலை இலக்கிய தொடக்க விழா 22.12.2019 அன்று காலை 9.15 மணியளவில் கல்லடி துளசி மண்டபத்தில் பேராசிரியர் சே.யோகராசா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

DSC 0936 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதுறு ஆறு பெருக்கெடுத்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர்  மீட்புப்பணிக்காக சென்று கொண்டிருந்த போது மாவடியோடை பாலத்தை நீர் பெருக்கெடுத்ததையடுத்து இயந்திரப்படகினை உழவு இயந்திரம் மூலமாக ஏற்றி சென்ற வேளையில் குறித்த மாவடியோடை ஊடாக பெருக்கெடுத்த நீரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து அதில் பயணம் செய்த தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் நீரில் முழ்கி அதிஸ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கி இருப்பதுடன் முழ்கிய கிராமங்களில் சிக்குண்ட மக்களை அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடற்படை மற்றும் இராணுவப்படையினரின் ஒத்துழைப்புடன் விசேட உலங்கு வானூர்தி மற்றும் இயந்திரப்படகுகள் மூலம் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தில் 30 பேரும் மாவடியோடை பகுதியில் 33 பேரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

DSC 0885 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் உள்ள  வறுமை நிலைக்குட்பட்ட மாணவர்களை இணங்கண்டு அதில் 400 மாணவர்களுக்கு   கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 21.12.2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட     செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க  அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

DSC 0786 resizedலண்டன் ஹென்சோ இஸ்ரியு கராத்தே அக்கடமியினரால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்களுக்கு அரசினால் எவ்விதமான நிவாரணப்பொருட்களும் வழங்கப்படாத நிலையில் உள்ளமையை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது கவனத்தில் கொண்டு இவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென பற்றி நியூஸ் (Batti News) ஊடக ஸ்தாபகரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த ஸ்தாபகர் லண்டன் அக்கடமியிடம் இருந்து உதவியை பெற்று 150 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதியான  பொருட்களை கொள்வனவு செய்து மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர் அனைவருக்கும் இந்த நிவாரண உதவியினை வழங்கிவைத்தமைக்கு லண்டன் அக்கடமி நிறுவனத்திற்கும் விசேடமாக ஆர்.சயநொளிபவனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

DSC 0663 resized

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 18.12.2019 மாலை 2.30 மணியளவில் ஒளி விழா நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 06 ஆந் திகதி தொடக்கம்  டிசம்பர் 13 ஆந் திகதி வரையும் 128  பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1879 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் 17.12.2019 அன்று  இழப்பிட்டிற்கான அலுவலக அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று காலை 9.30 மணியளவில் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2019 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா  மாவட்ட கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு   மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தலைமையில் 17.12.2019 செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

DSC 0581 resized

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிற்றூளியர்களுக்கு இன்று உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம் 16/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவி யேற்றுக்கொண்ட கௌரவ திருமதி அனுராதா ஜகம்பத்  அவர்கள் 13/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ முதல் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டார்.