- Details
- 143views
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-2021 காலப்பகுதிக்கான பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ள 67 ஆயிரத்தி 932.1 ஹெக்டேயர் வயல் நிலங்களிற்கான மானிய உரத்தினைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான முன்மொழிவு விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 215views
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதனமானதும் பழமையானதுமான ஆயித்தியமலை புனித திருத்தலமான சதாசகாயமாதா திருத்தல திருவிழா எதிர்வரும் 28-08-2020 அன்று ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 17/08/2020 அன்று மட்டக்களப்பு சால்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 182views
காத்தான்குடியில் இயங்கிவரும் சிவில் சமுக அமைப்பாகிய பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி கலாமதி பத்மராஜா அவர்களுக்கு வரவேற்பழிக்கும் நிகழ்வொன்று 17.08.2020 அன்று மாலை காத்தான்குடி சம்மேளனக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற இரு சமுகத்தினையும் எனது மாவட்ட மக்களாகவே பார்கின்றேன் என அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பங்குதாரர்களுடனான விசேட கலந்துடையாடல்
- Details
- 201views
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள புடவைக்கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான பங்குதார்கள் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா அவர்கள் தலைமையில் 13.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 174views
பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை குறைப்பது தொடர்பாக விசேட பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 13.08.2020 அன்று கல்லடி கிரீன் காடன் ஹோட்டலில் இடம்பெற்றது.
- Details
- 257views
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 272views
பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்பு தினம் எதிர்வரும் 05 ஆந் திகதி நடைபெறவிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான தேர்தலினை நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 03.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 275views
பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில் பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாகப் பயன்படுத்தவேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 31.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- Details
- 267views
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 29.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது.
- Details
- 239views
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 28.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 235views
எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 4 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
- Details
- 239views
எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 4 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
- Details
- 275views
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் கட்ட வாக்களிப்பு 16.07.2020 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
- Details
- 347views
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு சம்பந்தமாக மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 15.07.2020 அன்று நடைபெற்றது.
- Details
- 263views
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் வேலையற்ற ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான பல்நோக்கு தொழிற்பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பில் 4452 இளைஞர் யுவதிகள் இப்பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்விண்ணபதார்கள் அவர்களின் திறமைகள், தகுதிகள் மற்றும் இலட்சியங்களுக்கேற்ப விண்ணப்பித்த துறைகளுக்கமைவாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினூடாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
- Details
- 271views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான புதிய சுற்றுலாத்துறை திறன் மூலோபாயம் மற்றும் செயல்திட்டம் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 15.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 261views
பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15.07.2020 அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டது.பிரதி தேர்தல் ஆணையாளர்களான திரு.எம்.எம்.எஸ்.கே. பண்டார, திரு.எஸ். அட்சுதன் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையிலான தேர்தல் கடமை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் குழுவினை 15.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி கலந்துரையாடினர்.
- Details
- 233views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜூலை 03 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரையும் 13 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 டெங்கு நோயாளர்களும், ஏறாவூர் மற்றும் கோரளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் ஒரு நோயாளருமாக மொத்தம் 13 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
- Details
- 294views
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு 14.07.2020 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், மற்றும் அரச திணைக்களங்களின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலகங்களிலும் இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்.
- Details
- 310views
பொதுத் தேர்தல் 2020 இற்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 14, 15ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றவுள்ள அஞ்சல் வாக்கு மேற்பார்வை உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 13.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 280views
பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு 12.07.2020 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீ ராமகிருஸ்ண மிஸன் மட்டக்களப்பு கல்லடியில் பொது முகாமையாளர் சுவாமி தக்ஸயானந்தா தலைமையிலும், உதவிப்பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தருடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
- Details
- 298views
மகாவலி கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் உலக வங்கி நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட மறுவயல் பயிர்களின் உற்பத்தியின் அறுவடைகள் வைபவ ரீதியாக தற்பொழுது நடைபெற்று வருகிறது.
- Details
- 280views
மகளிர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நிறுவப்பட்டுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் மற்றும் பகல் பராமரிப்பு வசதிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 10.07.2020 அன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
- Details
- 261views
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வெளிநாட்டு நிதி உதவியுடனான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 09.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 261views
இலங்கை அரசாங்கமும் கொரிய அரசாங்கமும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய உலக உணவுத் திட்டத்தின் அங்கீகாரத்தில் சுமார் 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஐந்து மாவட்டங்களில் வறுமை ஒழிப்புத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்களின் சாத்திய செயல்பாடுகளை நேரில் கண்டறிய இலங்கை வந்துள்ள கொரியநாட்டு பிரதிநிதிகள்குழு 07.07.2020 அன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
- Details
- 266views
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று அச்சபையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் புலமைப் பரிசில் காசோலைகளை 07.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வழங்கிவைத்தார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின்கீழ் சுயதொழில் புரிவோர் முதுமையடையும்போது அவர்களுக்கான அரச ஓய்வூதிய பாதுகாப்பொன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் சுரக்கும, ஆரஸ்ஸாவ ஆகிய ஓய்வூதியத் திட்டங்கள் நாடுபூராகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
- Details
- 298views
இலங்கை அரசாங்கத்திற்கும் கொரிய நாட்டு அரசாங்கத்திற்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019, 2020 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 07.07.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
- Details
- 241views
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் தட்டுமுனைக் கிராம சேவகர் பிரிவில் ஆலயத்திற்கான புதிய மடப்பள்ளி மண்டபமும், ஆலய பொதுக்கிணறும் 06.07.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
- Details
- 264views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜுன் 19 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜுன் 26 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
- Details
- 264views
சிறுபோக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் தற்பொழுது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் வழங்கிய உரமானியம் மற்றும் உள்ளீடுகளைக் கொண்டு உற்பத்தி செய்த நெல் உற்பத்தி இவ்வருடம் திருப்திகரமான விளைச்சலை தந்திருப்பதாக மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
- Details
- 270views
பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு அஞ்சல் வாக்களிக்கும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திற்கு 30.06.2020 அன்று ஒப்படைக்கப்பட்டது.
- Details
- 285views
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர் நிலைகளில் நீர் வற்றி மக்களுக்கான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17936 குடும்பங்களைச் சேர்ந்த 58915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் இடம்பெற்று வருகின்றது.
- Details
- 294views
அம்பாறை மாவட்ட கரை வாகுவட்டை நெல்வயல் கண்டங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வடிந்தோடச் செய்ய மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாயை கூட்டமொன்று 28.06.2020 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 279views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தற்பொழுது நாட்டில் பரவலாக அதிகரித்து வருகின்ற வேளையில் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இடம்பெற்ற டெங்கு முகாமைத்துவக் கூட்ட தீர்மானத்திற்கமைவாக இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- Details
- 297views
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம் பெற்று வருகிறது. அதற்கிணங்க இம் மாவட்டத்தின் நெல் அறுவடையினை சம்பிரதாய பூர்வமாக விசேட நிகழ்வுகளை நடாத்தி சகல கமநல சேவை பிரிவுகளிலும், விவசாயிகள் நெல் அறுவடை விழாக்களை சமய நிகழ்வுகளுடன் நடாத்தி ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய இம் மாவட்டத்தின் புளுக்குணாவி நீர்ப்பாசனப் பிரிவின் முதலைமடு, வட்டை மாவடி, முன்மாரி பகுதியிலுள்ள பதின்மூன்று விவசாயக் கண்டங்களின் விவசாயிகள் 29.06.2020 அன்று மாவடி முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா ஒன்றினை நடாத்தினர்.
- Details
- 320views
கலாச்சார அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மரபுரிமை ஆவணங்களை டிஜிடல் நவீன தொழிநுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், நூலகம் பௌண்டேசன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருகிறது.
- Details
- 265views
கரவாகுப்பற்று நற்பிட்டிமுனை மற்றும் கிட்டங்கி நாவிதன்வெளி விவசாயிகளின் தாழ்நில விவசாய காணிகள் முழுமையாக வெள்ளத்தினால் கிட்டத்தட்ட (5000) ஐயாயிரம் எக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டனர் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பேசியதன் அடிப்படையில் 27.05.2020 அன்று ஆற்றுவாய் வெட்ட, தீர்மானிக்கும் மாவட்ட செயலணி அவசரமாக கூட்டி தீர்மானம் எடுக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் கூட்டமானது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 283views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாவனைக்கு உதவாத பொருட்கள் பகிரங்க ஏலவிற்பனை 25.06.2020 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக வழாகத்தில் மாவட்ட செயலக கணக்காளர் திரு.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 215views
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொழில் வழங்குனர்களுக்கு மத்திய வங்கியின் வழிகாட்டுதலில் சலுகைக் கடன் வசதிகளை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். இச்சலுகைக் கடன்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்கள் எமது மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு நகரில் நவீன ஆடை விற்பனை நிலையமொன்றைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
- Details
- 354views
மாவட்ட விவசாய பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.வை.பீ. இக்பால் அவர்கள் சேவையிலிருந்து இளைப்பாறுவதை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவுபசார நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில், சகல அரச உத்தியோகத்தர்களும் என்றோ ஒருநாள் ஓய்வுநிலைக்கு உள்ளாகியாகவேண்டும்.
- Details
- 270views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் 23.06.2020 காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள் ஞானிகள் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார்.
- Details
- 240views
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமேரிக்க நாட்டின் உதவியில் மாவட்ட மட்டத்தில் புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது. பதவியிலிருக்கும் அரசாங்கம் விரும்புகின்ற நல்லிணக்கம், சகவாழ்வு, சமூக அபிவிருத்தி போன்ற திட்டங்களை கிராம மட்டத்தில் அமுல்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கமைய மாவட்ட ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த சகவாழ்வு நல்லிணக்கத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
- Details
- 274views
மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவு வைரவிழா அண்மையில் மட்டக்களப்பு ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
- Details
- 355views
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் இம்மாவட்டத்தில் முற்கூட்டியே நெல் விதைப்பு இடம் பெற்று ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு முன்னர் நெல் அறுவடை செய்யப்படுவதால் இச் சிறுபோகத்தில் நெல் கொள்வனவினை தற்பொழுது அறுவடை தொடங்கியுள்ள காலத்திலேயே மேற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து 20.06.2020 முதல் இம் மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களூடாக கொள்வனவு செய்வதற்கு இச் சபையின் தலைவர் அனுமதி வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
- Details
- 434views
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டைக் கட்யெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய கிராமத்திற்கு ஒரு வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பிரதேசத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணிப் பிரதேசத்திலும் தலா ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு வீடுகள் 18.06.2020 அன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
- Details
- 433views
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிறைந்துரைச் சேனையில் நிறுவப்பட்டுள்ள தலா ஆறு அரை இலட்சம் ரூபா பெறுமதியான புதிய இரு வீடுகள் 16.06.2020 அன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
- Details
- 464views
கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது.
- Details
- 308views
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியின் காரணமாக அழிவின் விழிம்பிலிருந்த சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை அம்பாறை மாவட்ட களுகல் ஓயாவிலிருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபருக்கு கலாபூசணம் ஞானமுத்து பேரின்பம் தலைமையிலான மட்டக்களப்பு விவசாய அமைப்புகள் 13 இணைந்து 15.06.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து பாராட்டுத் தெரிவித்தனர்.
- Details
- 387views
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பிராந்தியக் காரியாலயங்கள் நாடுபூராகவும் 21 காணப்படுகின்றது. இவற்றின் செயல்திறன் மதிப்பீட்டில் மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் முதலிடம் வகிக்கின்றது என புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தவிசாளர் அனுர வல்பொல மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் புதிய இடத்திற்கு இடமாற்றி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தார்.
- Details
- 316views
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் காணப்படும் வடிகான்கள் மழை நீர் வடிந்தோடக்கூடியவாறு சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம் 10.06.2020 அன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாகவிருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
- Details
- 323views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு அரச திணைக்களங்கள் மற்றும் அரச சாரபற்ற திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடுமையான நடவடிக்கையில் இறங்குவதற்கு மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணி தீர்மானித்துள்ளது.இந்த மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணியின் மீளாய்வு விசேட கூட்டம் இக்குழுவின் தலைவியும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.
- Details
- 328views
கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா ஜஹம்பத் அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் குழு 11.06.2020 அன்று காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
- Details
- 386views
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கை மற்றும் மறு வயல் பயிற்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கமைய இம்மாவட்டத்தில் குறித்த தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
- Details
- 219views
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்தலங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுக்கமைய எதிர்வரும் 12ஆந் திகதி முதல் சமய வழிபாடுகளில் ஈடுபட இம்மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்குழு அனுமதித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 10.06.2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச ஊடப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
- Details
- 239views
ஜெர்மன் நாட்டின் ஜெர்மன் கூட்டுத்தாபன உதவித் திட்டத்தில் இந்த விஷேட திட்டத்தை தென் மாகாண தங்காலையை தலைமையாகக் கொண்டு செயற்படும் நவஜீவன அமைப்பு அமுல் நடத்தி வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வேண்டுகோளில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணக்களத்தின் சிபாரிசில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு அவயவங்களை இழந்த மக்களுக்கு 10.06.2020 அன்று இலவசமாக செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
- Details
- 292views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று ஆராயப்பட்டு வருகின்றுது. கனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்தியா ஊடாக கொழும்பு மாநகரசபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது மட்டக்களப்பில் பரீட்சார்த்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 300views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த மாதம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து களுகல் ஓயா சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் திரு.சதாசிவம் சுபாகரன் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவிற்கு தெரிவித்தார்.
- Details
- 421views
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்தம் சேகரிக்கும் இரத்ததான முகாமொன்று 03.06.2020 அன்று நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில், இப்பள்ளிவாயல் வழிகாட்டலில் இயங்கி வரும் ஸலாமா பௌன்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
- Details
- 466views
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று ஆராயப்பட்டு வருகின்றுது.
- Details
- 355views
உள்நாட்டு விவசாயத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க எதிர்காலத்தில் இலவச மானியம், இலவச உள்ளீடுகள், விவசாய ஏற்றுமதி கிராமங்கள் உருவாக்குதல் மற்றும் ஏனைய உற்பத்தி உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட மட்டத்தில் புதிய தரவுகளை சேகரிக்க விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஆகியவற்றால் தற்பொழுது மாவட்ட மட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
- Details
- 461views
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலையைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதி அரச தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த அரச தொண்டார்வு நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- Details
- 309views
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான தொழிலுக்கு புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு ஹொலன்ட் நாட்டு உதவியில் தொழில் திறமைகொண்ட பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனமான எஸ்கோ நிறுவனம் உதவி வருகின்றது.
- Details
- 276views
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழில் செய்யும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- Details
- 311views
கொரோனா நோய்த்தொற்று மக்களிடையே பரவாமலிருக்க துரிதமாக செயற்பட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யூனானி வைத்திய முறையிலான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் யூனானி வைத்தியர் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.
- Details
- 313views
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் 27.05.2020 அன்று கையளிக்கப்பட்டது.
- Details
- 305views
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலையைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதி அரச தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த சர்வதேச மற்றும் உள்நாட்டு சார்பற்ற அரச தொண்டாற்று நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- Details
- 234views
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விவசாயப்பிரிவு நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நவீனமயக்கால் திட்டங்களை மீளாய்வு செய்யும் மாகாண திட்ட வழிநடாத்தல் குழுக்கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு துசிதபீ வனிகசிங்க தலைமையில் மட்டக்களப்பு நீர்பாசனத்திணைக்கள மாகாணப்பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் 21.05.2020 அன்று இடம்பெற்றது.
- Details
- 317views
கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரதேசசெயலாளர் திரு.எஸ்.சுதாகரன் தலைமையில் 20.05.2020 புதன்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பணியில் உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி சுபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.கலைச்செல்வி வாமதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர்.
- Details
- 333views
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு நவீன தொழிநுட்பத்துடன் விவசாயத்தில் ஈடுபாடு காட்டிவருகின்ற விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- Details
- 237views
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- Details
- 306views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை நிலைய தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செயற்படுகின்ற தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
- Details
- 382views
சனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாக கொரோனா நோய்த்தாக்கம் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான மற்றும் நோயாளர் கொடுப்பனவு, வயோதிபர்களுக்கான கொடுப்பனவு, மற்றும் சமுர்த்தி உதவிபெறுவோர், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் போன்றேருக்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவு மட்டக்களப்பு மாவட்டத்தில் 18.05.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 525views
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சு வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்க முன்னுரிமை என்ற அடிப்படையில் அமுல்படுத்தும் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் பயனுள்ள திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் கூடிய பயன்பெறவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் இத்திட்டம்பற்றி கருத்து வெளியிடுகையில் கவலை தெரிவித்தார்.
- Details
- 336views
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் செயற்பட்டு வருகின்ற விவசாயிகளுக்கான அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 14.05.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 334views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கியிருக்கும் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களுக்கு வர்ணந்தீட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட செயலக சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- Details
- 374views
மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிரல் பணிகளை துரிதப்படுத்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- Details
- 304views
கொரோனா நோய் தக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டு இருந்தநிலையில் அதிகமான அரச திணைக்களங்கள் சீராக இயங்காத நிலையில் தடைப்பட்டு ஒரு சில ஊழியர்களுடன் செயற் பட்டு வந்த அலுவலங்கள் மக்கள் பணிகளை 11.05.2020 முதல் ஆரம்பித்துள்ளது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஏனைய திணைக்களங்கள், நியதிச்சபைகள், கூட்டுத்தாபனங்கள், ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், ஆடைத்தொழில் சாலைகள் போன்றன இன்று செயற்பட்டு வருவது அவதானிக்க முடிந்தது.
- Details
- 361views
கொரோனா தொற்று அபாயம் காரணமாக அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை தொலைக்காட்சி மூலமாக மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
- Details
- 255views
எதிர்வரும் 11 ஆந் திகதி திங்கட்கிழமை இயல்புவாழ்வைக் மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய சகல அரசாங்க சேவைகளும் முழுமையாக செயல்படவேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அரச பணிமனைகள் சகலதும் திறக்கப்பட்டு சுகாதாரத் துறையின் நிபந்தனைக்கமைய மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க செயற்படவிருக்கின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 08.05.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி விசேட கூட்டத்தில் தெரிவித்தார்.
- Details
- 502views
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் புளுக்குணாவி குளத்தினை 05.05.2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையிலான நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் குழுவினர் பார்வையிட்டனர்.
- Details
- 352views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகளான புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீர் பற்றாக்குறை தொடர்பாக கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து சேனநாயக சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Details
- 291views
மட்டக்களப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீரினைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வேறு தேவைகளுக்குமாக குடிநீரைப் பயன்படுத்துவதனைத் தவிர்த்து சிக்கனமாக குடி நீரினைப் பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 04.05.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீர் வளத்தினை முகாமைத்துவம் செய்து உன்னிச்சைக் குளத்திலிருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்குமாக நீரினை பங்கீடு செய்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் தெரிவித்தார்.
- Details
- 321views
மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் உள்ளுராட்சி சபைகள் தொற்று நீக்கல் விசிறல் முதல் மக்கள் ஒன்று கூடும் சந்தை போன்ற இடங்களை முகாமைத்துவம் செய்வது வரையிலான அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமலிருக்க இவர்களின் பங்களிப்பு மேலானது எனவும் பாராட்டப்படவேண்டியது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 322views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- Details
- 225views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தவிர்க்கும் முகமாக தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கும், மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குமாக அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- Details
- 318views
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் 01.05.2020 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களினால் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
- Details
- 382views
கொரோனா நோய் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கான நிவாரன பணிகளை வழங்குவதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு ஊழியர்கள் சேவையாற்றினார்கள்.
- Details
- 385views
அரசாங்கத்தின் அரிவுறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டசெயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சமுகமளிக்கும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Details
- 380views
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழி செய்யும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- Details
- 393views
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாகத்தினை சவாலுக்கு உட்படுத்திவந்த போலி முகநூல் மூலமாக விமர்சனங்களை செய்துவந்த ஆசாமிகள் எட்டுப் பேர் 16.04.2020 அன்று மாலை காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Details
- 446views
கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மரக்கறிச் செய்கையாளர்களது உற்பத்திகள் சந்தைப்படுத்துவதிலிருந்த அசௌகரியங்களைத் தவிர்க்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து விரைவான தீர்வினை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
- Details
- 369views
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தினால் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்கள் 575 இற்கு உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பில் இயங்கிவரும் லிப்ட் தன்னார்வுத் தொண்டு நிறுவனம் பிரித்தானியாவில் இயங்கி வரும் மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் நிதியுதவியுடன் வழங்கிவைக்க முன்வந்துள்ளது.
- Details
- 642views
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் முன்னெடுக்கும் சௌபாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாய உற்பத்திகளுக்கு தற்பொழுது முன்னுரிமை வழங்கப்பட்டு விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
- Details
- 329views
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரண உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் வழங்கி வைத்தார்.
- Details
- 351views
அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் 13.04.2020 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 395views
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் முன்னெடுக்கும் சௌபாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாய உற்பத்திகளுக்கு தற்பொழுது முன்னுரிமை வழங்கப்பட்டு விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
- Details
- 415views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையும் அரசினாலும் தனியார் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊடாகவும் தனிநபர்கள் மூலமாகவும் கிடைத்த நன்கொடைகள் அனைத்தும் மாவட்ட செயலகம் மூலம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப்பணி கிரமமான முறையில் நடைபெற்றுவருவதாக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 336views
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் சமூர்த்தி உதவியைப்பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள சுமார் 3347 குடும்பங்களுக்கும், 263 வயோதிபர் ஊதியம் பெறவும், 314 அங்கவீனர் கொடுப்பனவு பெறவும், 31 கிட்னி நோயாளர்கள் நிதி பெறவும் காத்திருப்போர் பட்டியலிலுள்ளவர்களுக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையிலான உத்தியோகத்தர் குழு 09.04.2020 அன்று நேரடியாக அரசின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளது.
- Details
- 329views
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35000 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 09.04.2020 இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
- Details
- 506views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அபாயம் ஏற்ப்பட்ட காலம் முதல் இன்று வரை கூலித்தொழிலாளர்களுக்கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் மாவட்ட செயலகத்தினுடாக பிரதேச செயலங்களின் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.
- Details
- 419views
கோவிட் 19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திவரும் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த கூலிவேலைதொழிலாளருக்கு உலருணவுகளை அன்பளிப்புச்செய்ய தொடர்ந்தும் பல தொண்டார்வ அமைப்புக்களும் பொதுநல சங்கங்களும் முன்வந்துள்ளன.